வணக்கம். உங்களை நான் பல நாட்களாக தேடி கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இங்கு பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சி.
வணக்கம். என்னை எதற்கு நீங்கள் தேடினீர்கள்?
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதானு எனக்கு தெரியாது. என் மகன் வீட்டை வீட்டு ஓடிவிட்டான். ஏதோ ஒரு மாநிலத்திலிருந்து உங்களுக்கு தொலைபேசியில் அழைத்திருந்தான்.
ம்ம்ம். வினோத். எனக்கு தெரியும். அவனை அத்தனை சுலபமாக மறக்க முடியாது.
நீங்கள் இல்லையென்றால் ஒரு வேளை அப்படியே தொலைந்து போயிருப்பான். அந்த ஐந்து ஆண்டுகள் நீங்கள் அவனுக்காக செலவழித்தது ரொம்ப பெரிய விஷயம் தானே. அவன் வாழ்க்கை மாறியது.
நல்ல விஷயம் தானே. குழந்தைகள் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். சில நேரங்களில் பெற்றோர்கள் சொல்வது அவர்களுக்கு கசக்கிறது. பெற்றோர்களும் பல பொறுப்புகளை சுமந்து அசரும் வேளைகளில் குழந்தைகள் அவர்களின் வித்தைகளை வெளி படுத்துகின்றனர்.
நான் என்ன செய்வது, நான் எதை சொன்னாலும் அவனுக்கு பிடிப்பது இல்லையே! நீங்களே பார்த்திங்க இல்லையா, கொஞ்சம் கெடுபிடியா இருந்ததும் ஓடிவிட்டான். ஒரு முறை இல்லையே ஐந்து முறை ஓடினான்.
யாரையும் குற்றம் சொல்வதற்கு இல்லை. அவர் அவருடைய பிரச்சினைகள் அவருக்கு. தனித்து இயங்கும் நீங்கள் என்ன தான் செய்ய முடியும்.
என்னிடத்திலும் சில குறை இருந்ததை நான் உணர்ந்தேன். நீங்களும் தனியாக தான் இயங்குகிறீர்கள். ஆனால் போகும் இடம் எல்லாம் அவனையும் மற்ற குழந்தைகளையும் கூடவே அழைத்து கொள்கிறீர்கள். அவர்களை உங்களுடன் இயங்க வைத்தீர்கள். எனக்கு அது தெரியாமல் போய்விட்டது. உணரும் காலங்களில் அவனுக்கு என்ன பிடிக்கல.எது எப்படி இருந்தாலும் மாற்றங்களை நீங்கள் தான் கொண்டு வரனும்னு இருக்கிறது. உங்களைப் பார்த்து நானும் சில மாற்றங்களைக்கொண்டு வந்துள்ளேன். நாங்கள் நல்லா இருக்கிறோம். இதை சொல்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
இப்போது அவனுக்கு 25 வயது இல்லை? என்ன செய்கிறான் அவன்? நல்லா இருக்கானா?
அவன் பட்டறை சிறப்பாக நடக்கிறது. பலமுறை தொலைபேசியில் அழைத்து கிடைக்காததால் உங்களுக்கு நிறைய மின்னஞ்சல் அனுப்பியதாக சொன்னான். எதையும் பார்க்கலயா, நீங்கள்?
இல்லை அம்மா. எதுவும் இந்த காலகட்டத்தில் பயன்பாட்டில் இல்லை.
இங்கே என்ன செய்கிறீர்கள்?
ஹ்ம்ம்ம்.. நிறைய உழைத்து அளுத்து போன உணர்வு வந்தது. அதில் சில அதிருப்திகள் என்னை திணர வைத்தது. மாற்றத்தை தேடி சில இடங்களுக்குச் சென்றேன். இப்போது இங்கே. பயணத்தை தொடர நினைக்கும் போது புறப்படுவேன். நீங்கள் எப்படி இங்கே? இந்த சில மாதங்களில், நான் சந்திக்கும் முதல் தோழர் நீங்கள் தான் அம்மா.
என் அதிர்ஷ்டம் தான் உங்களை சந்தித்தது. இந்த கோவிலில் எங்கள் குலதெய்வ பூசை செய்வதற்காக வந்தேன். நாளைக்கு பூசை முடிந்ததும் நாளை மறுநாள் வீடு திரும்புவேன்.
ஒரு வேண்டுகோள். என்னை பார்த்ததாக யாரிடமும் சொல்ல வேண்டாம். குறிப்பாக மாமனிடம் சொல்ல வேண்டாம்.
உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை? எங்கள் பார்வைக்கு நீங்கள் இருவரும் பிரமாண்டமான ஜோடி. அன்பு பண்பு நிறைந்தவர்கள் நீங்கள். எந்த வாக்கு வாதங்கள் இருந்ததாக கூட எங்களுக்கு தெரியலயே! யார் கண்கள் பட்டதோ தெரியல. இப்படி ஒரு பிரிவு.
யார் கண்களும் படல அம்மா. மாமனுக்கு சுதந்திரம் பெரியது. அவர் வேளைகளில் மூழ்கிவிடுவார். சில சமயம் பல மாதங்களுக்கு அவரை தொடர்பு கொள்ள முடியாது. எதுவும் அவருக்கு ஞாபகம் இருக்காது. அவரின் சுதந்திரத்தை பரிசாக நான் கொடுத்து விட்டேன். அன்பு பரிசு.
ஆனால் அவர்தானே உங்களுக்கு சிறந்த தோழர்!
சிறந்த தோழர் அன்பானவருக்கு துன்பம் வரும்போது கூட இருக்கனும் இல்லையா? அவருக்கு அது ஞாபகம் கூட இருக்காது. என் துன்பங்களில் நான் தத்தலிக்கும் போது அவர் அருகில் இருந்தது கிடையாது. எனக்கு துன்பம், அவர் எனக்கு தேவை என்பதை கூட அவருக்கு தெரியாது. அந்த சுமைகளை அவருக்கு கொடுக்கவும் எனக்கு விருப்பம் இல்லை.
அவரிடம் பேசி இருக்கலாமே?
என் மனசுக்குள் வலிகளை சுமந்து, அதை ஜீரணம் செய்து சக்தியாக மாற்றி கொண்டேன். எத்தனை சோதனைகள், அதனால் வேதனைகள்! அதன் அளவை யாராலும் யூகிக்க முடியாது. யாரிடமும் சொல்வதால் எந்த பயனும் இல்லை.
உங்கள் பள்ளி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. எத்தனை மக்கள் உங்களால் வாழ்ந்தனர். இப்போது அந்த பள்ளி?
பள்ளி இருக்கிறது. அதை நடத்துவதற்கு நிறைய ஆர்வம் கொண்ட ஒருத்தரிடம் ஒப்படைத்து விட்டேன். அந்த ஆர்வத்தில் அவர் சில குழப்பநிலைகளை உருவாக்கினார். என் மாணவர்களின் பெற்றொர்களுடன் தேவையில்லாத சலசலப்புக்களை ஏற்படுத்தினார்.
அவரை இல்லை நீங்கள் துரத்தி இருக்கனும்.
ஆசை யாரை அம்மா விட்டது. எனக்கு மோதல்களில் விருப்பம் இல்லை. இப்படி ஒரு சூழலில் விலகுவது தான் சிறப்பு. விலகி விட்டேன்.
உங்கள் மக்கள்?
என் மக்கள் சுகவாசிகளாக உருவாகி கொண்டிருந்தனர். தானாக இயங்கனும் என்று அவர் அவர் பாதையில் விட்டு விட்டேன். எனக்கு திடீரென்று ஒரு பெரும் அசதி. இப்போது ஓய்வு எடுக்கிறேன்.
ஏன் தனியாக இப்படி நீங்கள் துன்பமடையனும்? யாரும் துணை?
எனக்கு நானே துணை! மிகச்சிறந்த மனிதன் ஒருவரை சந்தித்த பிறகு வேறு யார் வந்தாலும் அவர்களை நெருங்கும் எண்ணம் வருவதில்லை.
அப்படி யாரும்?
வந்தார்கள், முயற்சி செய்தார்கள், பலனளிப்பது போல அறிகுறிகள் இல்லாததால் புறப்பட்டு விட்டார்கள்.
இப்படி எதற்கு தனியாக கஷ்டப்படனும் நீங்கள்? எங்களுடன் வாருங்கள்.
வாக்குறுதி தான் வாழ்க்கையில் மிக பெரிய பொய் அம்மா! நான் இருக்கிறேன், இது சத்தியம்! என்று சொன்னவர்கள் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த உறுதியான சொற்களை நம்பியவர்கள் ஏமாற்றம் தான் அடைவார்கள்.
சரி! அப்போ இருப்பதை வைத்து சிறப்பாக வாழலாமே! எதற்கு இப்படி கடினமான வாழ்வு?
உணவில் சுவை இல்லாத போது அறுசுவை உணவு இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? கிடக்கும்போது தூக்கமே வராத போது எங்கே படுத்தால் என்ன? ஒவ்வொரு நொடியை நகர்த்தினால் போதும் என்ற நிலை, இந்த நிலை.
நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?
நான் நன்றாக தான் இருக்கிறேன். எளிமையாக வாழ்ந்து காலத்தை முடிக்கலாம் என்ற எண்ணம். தனியாக இருப்பது ஒரு அமைதி நிலையை கொடுக்கிறது. இப்போது இருப்பது பரிபூரணம் என்று ஏற்று கொண்ட நிலை. இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டும்.
எங்களை வந்து பார்க்கனும் நீங்கள்.
சந்திக்க வாய்ப்பு இருந்தால் சந்திக்கலாம். இன்று இப்படி. நாளை என்ன நினைக்கிறேன் என்று சொல்ல முடியாது இல்லை. சந்திப்போம் என்று நம்புவோம்.
நான் புறப்படுகிறேன் அம்மா. எங்களை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.
வினோத்தைக் கேட்டதாக சொல்லுங்கள். வணக்கம்.

No comments:
Post a Comment