கோவிலுக்கு போனேன் மிஸ்.
நல்லது. கோவிலில் என்ன செய்திகள்?
ஒன்னும் இல்லை. பஜனை படித்தார்கள். நைஸ்.
ஓ, சரி!
அதில் ஒரு பாட்டு.
ஹ்ம்ம்ம்..
ஜக்கம்மா, ஜக்கம்மா... எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது.
ஜக்கம்மாவா. இது என்ன புது கதையா இருக்கிறது? யார் ஜக்கம்மா?
ஜக்கம்மா சாமி மிஸ்! அன்பான சாமி. அந்த வரிகள். எங்களை காக்கும் ஜக்கம்மா. உங்களைப் போல.
ஹா ஹா ஹா ஹா... என்னை இப்போ சாமியா ஆக்கியாச்சா?
ஒரு கொம்பேரிசன் மிஸ். ஜக்கம்மா நல்ல சாமி. எங்களை காக்கும் சாமி. காட்டேரினு இன்னொரு சாமி இருக்கிறது. பாட்டி சொன்னார்.
கேட்ட பெயராக தான் இருக்கிறது ஐயா. சொல்லு. இன்றைக்கு வித்தியாசமான ஒரு கதை பேசுகிறாய்.
காட்டேரி, காவல் தெய்வம் போல. நிறைய பயம் கொடுக்குமாம். குழந்தைகள் அவங்களைப் பார்த்தால் பயப்படுவார்களாம்!
சரி. நீ என்ன சொல்ல வருகிறாய்?
எங்க டீச்சர்ஸை நினைத்தால் காட்டேரி ஞாபகம் வருது மிஸ். பொல்லாதவர்கள்!
ஏன் அப்படி சொல்கிறாய்.
எனக்கு அவர்களை கண்டால் பயம் மிஸ். சின்ன பிழை செய்தாலும், மரண அடி விழுது.
அது என்ன மரண அடி?
அவங்க ஒரு அறை விட்டாங்கனா காது கிழியும், கன்னம் வீங்கும், தலை சுற்றி விடும்.
ஐயோ!
எங்களை அடிக்க வரும்போது ஆவேசமா வருவாங்க. விழிகள் பிதுங்கி, கண்கள் சிவந்து, குரலை உயர்த்தி வீச்சு, வீச்சுனு கத்தி... அப்பப்பப்பா... காட்டேரி!
எதற்காக உங்களை அடிக்கனும்?
எல்லா விஷயத்துக்கும் அடிதான். பாடம் புரியாட்டி அடி, பாடம் முடிக்காமல் வந்தால் அடி, புத்தகம் மறந்தால் அடி. நாங்கள் சராசரி குழந்தையாக இருப்பதற்கு அடி.
ஏன் மறக்கனும் புத்தகத்தை?
எங்கள் சூழ்நிலை அப்படி. சரியான படிக்கும் அறை இல்லை. ஏழு பேர் ஒரே அறையில் இருப்போம். எல்லாம் கலந்து போகும். வீட்டில் தான் அப்படினு பள்ளிக்கு போனால் அங்கே இன்னும் கொடுமை பெருசா இருக்கு.
ஹ்ம்ம். என்ன செய்யலாம்?
ஒன்னும் செய்ய முடியாது மிஸ். இதை நீங்களோ, இல்லை அம்மாவோ வந்து கேட்டால் அதோட எங்கள் கதை முடிந்து விடும்.
ஏன்?
புள்ளி வைத்து கோலம் தான்.
புரியலயே!
அதையே சொல்லி, சொல்லி. இந்த வகுப்பில் இவன் தான் எட்டப்பன். இவனை யாரும் நம்பாதீர்கள், இவன் உருப்பட போவதில்லை.. அது இதுனு சொல்லி துன்பம் கொடுப்பாங்க. இன்னும் அடி கொடுத்து, உதை கொடுத்து, எங்களை கிள்ளி எடுப்பாங்க.
என்ன செய்யலாம் சொல்லு.
முடிந்தால் யாரையும் தமிழ் பள்ளிக்கு அனுப்ப கூடாது மிஸ். நாங்கள் தமிழ் படித்து கொள்கிறோம். தமிழ்ப்பள்ளி வேண்டாம்.
மற்ற பள்ளியில் இந்த பிரச்சினைகள் இல்லையா என்ன?
இல்லை மிஸ். எங்கள் அண்டை வீட்டில் வேறு பள்ளிகளில் படிக்கின்றனர், இப்படி எல்லாம் இல்லை. தமிழ் பள்ளியில் தான் காட்டேரிகள்.
இதை எப்படி தீர்க்கலாம்?
நீங்கள் ஒரு பள்ளி ஆரம்பிக்கலாம். உங்களுடன் படிக்க எங்களுக்கு பிடிக்கும். நீங்கள் தான் எங்களுக்கு ஜக்கம்மா மிஸ்!
ஜக்கம்மா, காட்டேரி! வித்தியாசமாக யோசிக்கிறாய் ஐயா. கவலைப்பட வேண்டாம். நல்லா படி. சொந்த பள்ளி எல்லாம் திறக்கும் அளவுக்கு இங்கே வழிகள் இல்லை ஐயா. ஆனால் என்னால் முடிந்ததை உங்களுக்கு நான் செய்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் இடைநிலைப் பள்ளிக்கு போனதும் சூழல் மாறும். சரியா?
சரி மிஸ்!

No comments:
Post a Comment