எனக்கு ஓர் உதவி செய்கிறீர்களா தோழி?
நிச்சயமாக செய்யலாம். சொல்லுங்கள் என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?
அன்பு இல்லம் ஒன்று திறக்கனும். முடியும் என்று நினைக்கிறீர்களா?
அன்பு இல்லம்.. யாருக்கு?
உங்களுக்கு, எனக்கு, என் தங்கைக்கு, என் அம்மாவுக்கு...
என்ன சொல்ல வாரீங்க தோழி?
நாம் அனைவரும் ஓய்வு பெறும் வயதை நெருங்கி கொண்டு இருக்கிறோம் இல்லையா?
ஆமாம்..
அம்மாவோ அப்பாவிற்கு பிறகு சதா தூக்கமும் தொலைக்காட்சியுமாக இருக்காங்க. அவங்க பொழுது நன்றாக போனால் பரவாயில்லை. அவங்க தனிமையில் மூழ்கி விடுகிறார்கள். இப்படியே இருந்தால் விரைவில் நோய் வர வாய்ப்பு உண்டு.
சரி. என்ன செய்யலாம் என்று சொல்லுங்க. அன்பு இல்லம் என்பது என்ன முதியோர் இல்லம்மா?
முதியோர் இல்லத்தில் எல்லாம் அம்மாவை விடுவதாக இல்லை தோழி.
எனக்கும் அது உடன்பாடு கிடையாது. என்ன உங்கள் ஐடியா? சொல்லுங்க கேட்போம்.
இடையில் நான் ஒரு விளம்பரம் பார்த்தேன். நியூ சீலாந்தில் ஒரு இயக்கம்.
ஹ்ம்ம்ம்..
வயதானவர்கள், புதிதாக ஓய்வு பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து ஓர் இல்லத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
சரி..
ஒவ்வொருவரும் ஓரளவு பணம் கொடுத்து ஒரு வீட்டில் இருக்கின்றனர். வேலைகள் அட்டவணை படி நடக்கின்றது. ஒவ்வொரு நாளும் சாயங்கால வேளையில் எல்லாரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள். பிடித்த ஹாபியை வளர்த்து கொள்கிறார்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லி தருகிறார்கள்.
சூப்பராக இருக்கிறதே? நாம் அப்படி ஓர் இல்லம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
ஆமாம். நாம் ஏன் இதை செய்யக்கூடாது? ஃபார்மலாக வேண்டாம். கல்லூரியில் படிக்கும் போது வாடகை வீடு எடுத்து எல்லாரும் சேர்ந்து பாடங்கள், வேலைகள் சேர்ந்து செய்வோமே? அதேப்போல..
ஹ்ம்ம்ம் நல்ல கருத்து. ஆனால் இதில் கலந்து கொள்ளும் அனைவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களாக இருக்கனுமா என்ன? வருமானம் இல்லாதவர்கள் எப்படி? அம்மாவுக்கும் வருமானம் இல்லையே!
அதனால் தான் உதவி என்று சொன்னேன். அதாவது நாம் எப்பொழுதும் நம்மிடம் அதிகமாக இருப்பதை பிறருக்கு கொடுப்போம் இல்லையா? அதேபோல நீங்கள் ஒரு வயதானவரை தேர்ந்தெடுங்கள், நான் அம்மாவை அழைத்து கொள்கிறேன், என் தங்கை இன்னொரு முதியவரை சேர்த்து விடட்டும்.
கேட்க சிறப்பாக தான் இருக்கிறது. நாம் முயற்சி செய்யலாம்.
நாம் இவர்களை ஒன்று சேர்த்து சரியான முறையில் பொழுதுகளை கழிக்க உதவலாம். அவர்களுக்கு தேவையான உணவு முறை, மருந்து மாத்திரைகளை நாம் சரிப்படுத்தி கொடுக்கலாம்.
ஆமாம். அவர்களுடைய அனுபவங்களை கதையாக கேட்கலாம், எளிய உடற்பயிற்சி செய்ய பழகி கொடுக்கலாம், மூலிகை வைத்தியங்கள் மூலம் அவர்களின் உடல் சுகாதாரத்தை பேணலாம்.
இது வெற்றிகரமாக நடக்குமா?
நிச்சயமாக நடக்கும். நம் தோழர்களை அழைத்து இதை எப்படி செய்யலாம் என்று முடிவெடுப்போம். செயல்படுவோம். ஒன்று மட்டும் எப்போதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எளிமையான வாழ்க்கை முறையை மட்டுமே நாம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த வகையான ஆடம்பரம் இங்கே வேண்டாம்.
ஹ்ம்ம்ம். வழக்கம் போல பட்டியலை போடுவோம். முயற்சியில் இறங்குவோம். தடைகளை அகற்றுவோம். இதுவும் வெற்றி பெறும்.
ஒஃப் கோர்ஸ் தோழி. முயற்சி திருவினை ஆக்கும். வாருங்கள் வேலையைத் தொடங்கலாம். முதலில் தோழர்களுக்கு அழைப்பு.