சில நாட்களாக, இதயத்தை நசுக்கி, பிழியும் வலியிடம் சொன்னேன், உனக்கு எது தோன்றுகிறதோ அதை செய்! உன்னை நான் உணர போவதில்லை.
இதை மென்று விழுங்கி விட முயற்சித்தேன், முயற்சி திருவினையாகவில்லை!
இந்த வலி தானாக காணாமல் போய்விடும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு நொடி நகர்ந்தால் நிமிடங்கள் வரும். நிமிடங்களைக் கடந்தால் மணித்துளிகள் நகரும். ஒவ்வொரு நாளையும் இப்படியே வாழ்ந்திட வேண்டும்.
இந்த வரிசையில் மாதங்கள் வருடங்களாகிவிட வேண்டும்.
வாழ்க்கை ஓடி விட வேண்டும்.
பின் நோக்கும் போது, ஒரு நாள் இந்த துன்பங்களைத் துறந்து விட்டேன் என்று எண்ண வேண்டும்.
ஏதோ ஒரு நாள், வாழ்க்கையை நினைத்து நிறைவடைய வேண்டும்.
நிறைவு அடையும்போது மீண்டும் இந்த துன்பங்களைத் தானே தேடிப் போக கூடாது என்ற தெளிவும் பெற வேண்டும்.
ஷாந்தி! ஷாந்தி!
shanti... shanti...
ReplyDeletemozhi valam perugirathu. magizhchi. :)
ReplyDelete